ஸ்டாலின் மனைவி யார் தெரியுமா | do you know stalin wife | Tamil News | Tamil Cinema News | Kollywood
Muthuvel Karunanidhi Stalin (Tamil pronunciation: Mu. Ka. Sṭāliṉ; born 1 March 1953) known as M. K. Stalin, is an Indian politician from Tamil Nadu and president of the Dravida Munnetra Kazhagam (DMK) political party. He was the 37th Mayor of Chennai from 1996 to 2002 and 1st Deputy Chief Minister of Tamil Nadu from 2009 to 2011.
Stalin is the third son of 3rd Chief Minister of Tamil Nadu and DMK Chief M. Karunanidhi, and was born to his second wife, Dayalu Ammal. Stalin did Pre-university Course in Vivekananda College and completed his graduation in history from Presidency College, Chennai in University of Madras. Stalin became the Minister for Rural Development and Local Administration in the Government of Tamil Nadu after the 2006 Assembly elections. On 29 May 2009, Stalin was nominated as Deputy Chief Minister of Tamil Nadu by Governor Surjit Singh Barnala.
On 3 January 2013, Karunanidhi named Stalin as his heir apparent, thus ending a long time confusion about who would take over the party reins after Karunanidhi's death. Stalin was designated as the Working President of the DMK on 4 January 2017. On 28 August 2018, he was elected unanimously as the DMK Chief after Karunanidhi’s death.
துர்கா ஸ்டாலின் தமிழகத்தின் கவனத்துக்குரிய ஒரு அரசியல் குடும்பத்தில் ஸ்டாலின் மனைவியாக, திமுக தலைவர் மு.கருணாநிதியின் மருமகளாக இளம் வயதில் குடும்ப வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த 5 மாதங்களில் இந்தியாவின் பெரிய அரசியல் குழப்பத்தில் சிக்குவோம் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம் கணவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலை காலக்கட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டதே.
நெருக்கடி நிலை பிரகடன அனுபவம் மு.க.ஸ்டாலின் அரசியல் பிரவேசத்துக்கான பாதையாக அமைந்தது. இப்போது 40 ஆண்டுகள் கழித்து அப்போது அரசியலில் ஈடுபாடில்லாமல் குடும்ப மனிதராக தன் கணவர் ஸ்டாலின் இருந்தார் என்று துர்கா ஸ்டாலின் தன் நூலில் பதிவு செய்துள்ளார்.
துர்கா ஸ்டாலின் கணவர் குறித்து ‘அவரும் நானும்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார், இந்தப் புத்தகம் பிப்.27ம் தேதி வெளியானது.
நூல் வெளியீட்டு விழாவில் துர்கா ஸ்டாலின் பேசியதாவது:-
நான் எழுதிய புத்தகத்தை பார்க்கும் போது தலைபிரசவம் முடிந்து ஒரு தாய் குழந்தையை கையில் ஏந்துவது போல மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புத்தகம் எழுதுவதற்கு மட்டும் அல்ல, என் வாழ்க்கை முழுமைக்கும் எனது கணவர் பக்கபலமாக இருக்கிறார். என் ஆசை, கனவு, லட்சியங்களை நிறைவேற்றுவதில் என் கணவர் பங்கு அளப்பரியது. அவரை கணவராக அடைந்தது எனக்கு பெருமை. கருணாநிதியின் மருமகளாக நான் நுழைந்தது எனது அதிர்ஷ்டம். அவரது ஆசிர்வாதம் எனக்கு என்றும் இருக்கும் என நம்புகிறேன். எனது கணவரை போலவே இந்த கட்சி தொண்டர்கள் தான் எனது உயிர். எனது கணவரின் அரசியல் பயணத்தில் என்றென்றும் நான் பக்கபலமாகவும், உறு துணையாகவும் இருப்பேன். என்று கூறியுள்ளார் துர்கா ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு அப்போது வயது 23. திருமணமாகி ஐந்தே மாதங்கள்தான் ஆகியிருந்தன. சிறைக்கு தயாராகி நிற்கும் ஸ்டாலின் முன்னே கலங்கிய கண்களுடன் வந்து நின்றார் துர்கா. ‘நான் பத்து நாள் சுற்றுப்பயணம் செல்வதாக நினைத்துக் கொள். அதற்குள் வந்துவிடுவேன். பிரச்னை ஒன்றும் ஆகாது. ’ என்று சொல்ல, துர்காவும் தலையாட்டினார் கனத்த மனதுடன்.
ஸ்டாலினுக்கு நிச்சயம் நன்றாகவே தெரியம், பத்து நாட்களுக்குள் நிச்சயம் விடமாட்டார்கள்! கூடவே மரணத்தின் வாசலை நோக்கியே தான் நகர்கிறோம் என்று. ஆனால் புது மனைவியிடம் இதை சொன்னால், அவர் நொறுங்கிவிடுவார்! என்று வழியில்லாமல் பொய் சொன்னார்.
துர்கா பற்றி பழைய விஷயங்களை நினைவு கூறும்போதெல்லாம் ஸ்டாலின் இப்பவும் ‘அவசரநிலையில கைதானப்ப, பத்து நாள்ள திரும்பி வந்துடுவேன், பிரச்னை இருக்காதுன்னு பொய் சொல்லிட்டு போனேன்.’ என்று மறக்காமல் சொல்வார்.
பகுத்தறிவு நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் இருந்தாலும் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா. கடந்த சில மாதங்களாக அவர் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது அதிகரித்து வருகிறது. தை பூசம் திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பகுத்தறிவு குடும்பமாக இருந்தாலும் சாமி வழிபாடு செய்வதை, எங்கள் குடும்பத்தில், எவரும் தடுப்பதில்லை என்று கூறியுள்ளார். மாரியம்மன் சாமியை எனக்கு பிடிக்கும் என்று ஏற்கனவே கூறியிருக்கிறார் துர்கா ஸ்டாலின்.
மு. க. ஸ்டாலின் பற்றி ஒரு பார்வை:
1953ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று மு.கருணாநிதி-தயாளு அம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாக ஸ்டாலின் பிறந்தார்.ரஷ்ய அதிபர் 'ஜோசப் ஸ்டாலின்' நினைவாக தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தார் கருணாநிதி.
1975ம் ஆண்டு துர்கா என்கிற சாந்தாவை திருமணம் செய்து கொண்டார் ஸ்டாலின்.இவர்களுக்கு உதயநிதி என்ற மகனும்,செந்தாமரை என்ற மகளும் உள்ளனர்.மகன் உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் உள்ளார்.
2017ம் ஆண்டு திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
2018ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின் தலைவராக ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
Source : https://en.wikipedia.org/wiki/M._K._Stalin
Source : https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%95._%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
Source : https://ta.wikipedia.org/wiki/மு._க._ஸ்டாலின்